Wednesday, July 25, 2012

El Nino Danger

உலக வெப்பமயம் ஆகுதல் ஒரு புறம் இருந்தாலும் எல் நைனோ (El Nino) பிரச்சினையால் இந்தியாவில் பெய்ய வேண்டிய பருவ மழை இந்த வருடம் பெரிய கேள்விக்குறி என ஆரய்ச்சி கூறுகிறது. இது வரை பெய்ய வேண்டிய 8.3% மழைக்கு பதில் 4.05% சதவிகிதம் தான் பெய்திருக்கிறது தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில். இது எதனால் என்று பார்க்க போகிறோம்.

எல் நைனோ என்றால் என்ன? நன்கு தெரிந்தவர்கள் கீழே உள்ள உலக அதிசியம் கிரின் லேன்ட்டில் நடந்திருக்கும் விஷயத்தை படியுங்கள் தெரியாதவர்கள் முழுவதும் படிக்கவும். எல் நைனோ என்பது பூமியின் நில நடுக்கோட்ட்டுக்கு கீழ் நடக்கும் பருவ மாற்றம் அதுவும் பசிஃபிக் ஓஷன் பகுதியில் நடக்கும் தற்காலிக மாற்றம் தான் எல் நைனோ. அதாவது இது பூமியிலும் வான்வெளியிலும் இதன் தாக்கம் தெரியும். அதாவது வட ஹெமிஸ்பியரின் (Northen Hemisphere) குளிர் காலத்தின் போது கடல் வெப்பம் சில டிகிரிகள் அதிகரிக்கும். அப்போது இடி மின்னல் மெதுவாக கிழக்கு நோக்கி நில நடுக்கோடில் அருகே வரும். பசிஃபிக் ஓஷனில் (Pacific Ocean) கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வரும் அசுர காற்றும் காற்றுடன் கூடிய டிப்ரஷனும். அதனால் மேற்கு கடற்பரப்பில் கடல் சுமார் அரை மீட்டர் அளவுக்கு உயரம் கானும். அதனால் இதை சமம் செய்ய கிழக்கு கடலானது கீழ் இருந்து மேற்கில் உள்ள தண்ணிரை இழுக்கும். இது எப்படி என்றால் கிழக்கில் 20 - 22 டிகிரி தான் தண்ணீர் இருக்கும் ஆனால் மேற்கு கடல் பரப்பு சுமார் 30 டிகிரி வரை இருக்கும். எல் நைனோவினால் இந்த காற்று பலமாக அடிக்கபட்டு காற்று இந்த மேற்கு நோக்கி வந்த தண்ணீரானது திரும்பவும் கிழக்கு நோக்கி செல்லும். இதன் தொடற்ச்சி செய்கையால் கீழ் இருக்கும் குளிர் நீர் மாறி மாறி பசிஃபிக் கடலானது மிகுந்த வெப்பம் அதிகரிக்கும். இதனால் இந்த காற்றானது பருவ மழை மேகங்களை சிதைத்து மழையை அங்கும் இங்கும் சிதற வைக்கும் அப்படி சிதறிய மேகங்களின் அதிக அளவு மழை கடலில் பெய்து வீனாகும்.பொதுவாக இந்த நிகழ்வு மூன்றிலிருந்து ஏழு வருடத்திற்க்குள் வரும் என தெரிகிறது. இந்த வருட எல் நைனோ நிகழ்வால் பாதிப்பு வடக்கு ஹெமிஸ்பியரில் உள்ள தமிழகம் மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் அமெரிக்கா வரை உள்ள தெற்கு கெஹிஸ்பியர் இடங்கள் பாதிக்கும். இதன் தாக்கம் ஏறகனவே அமெரிக்கவின் அதி வெப்பம் இந்த சம்மரில் தாங்க முடியாமல் பலர் இறந்தனர். இந்த எல் நைனோ 2012 அமெரிக்கா, சைனா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய இடத்தில் மிகுந்த மழை அங்கு போகும் அதனால் பல நாட்டில் வெள்ளகாடாகும் அதே சமயம் அங்குள்ள காய்ந்த பூமிகள் திருபவும் விவசாயத்திற்க்கு ஏதுவாகும் நல்ல விஷயமும் அவர்களுக்கு் இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் என்னதான் மழைபெஞ்சாலும் ரெண்டு நாள்ல ஊரெல்லாம் வெள்ளகாடு ஆனால் அதுக்கு அடுத்த இரண்டு வாரத்தில தண்ணீர் பஞ்சம் இதுதான் இந்தியா அதுவும் தமிழகம் தான் அதிகம் பாதிக்கபடும் மானிலம் ஏன் என்றால் நம்மிடம் இருக்கும் ரிசர்வாயர்கள் தொடர்ந்து தண்ணீர் வெறும் 121 நாட்கள் மட்டும் தான் தரமுடியும். அதனால் தமிழகத்திற்க்கு இந்த நவம்பரில் இருந்து அடுத்த ஜூன் வரை தண்ணீர் பஞ்சம் வரும் என தெரிகிறது.





கிரின் லான்டில் ஒரு மிகுந்த அதிர்ச்சி நிகழ்வு நடந்திருக்கிறது. இந்த நாட்டில் முதல் படத்தில் உள்ள (ஜூலை 4) ஒரு 87% சதவிகித பனி நாலே நாட்களில் *ஜூலை 12க்குள்) முற்றிலும் உருகிவிட்டது. 40% சதம் உருகக்கூடிய ஒரு பனிப்பரப்பு 90% சதவிகிதம் மாறிய நிகழ்ச்சி முப்பது வருட சாட்டிலைட் கன்கானிப்பில் நிகழ்ந்ததே இல்லை. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது 150 வருடத்திற்க்கு ஒரு முறை நடக்ககூடிய நிகழ்வு கடைசியாக 1889 ஆம் ஆண்டு இந்த மாதிரி ஆகியது என கூறியிருக்கின்றனர். ஆனால் இதே மாதிரி அடுத்த வரும் வருடங்களில் நிகழ்ந்தால் அது உலக வெப்பமயற்றை மிகுந்த பிரச்சினையை உருவாக்கும் என கூறியிருக்கின்றனர். இது மனிதர்களின் அறிவியல் சாதனை ஆம் பூமி வெப்பமயம் என்பதை இந்த மனிதர்கள் தான் செய்திருக்கின்றனர் அது போக கடலின் மட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது மிகுந்த உண்மை. இதனால் பூமி நில நடுக்கம் மற்றும் சுனாமியால் ஜப்பான் போன்ற பல தீவு நாடுகள் காணமல் போகும் அபாயமும் உண்டு.

No comments: